• Sep 14 2024

பாண்டிச்சேரியில் ஆரம்பமான பிக் பாஸ் ஷூட்டிங்.. ஹோஸ்ட் யாரு தெரியுமா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ள நிலையில் இதனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்விக்கு இதுவரையில் அதிகாரபூர்வமாக பதில் கிடைக்கவில்லை.

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய பெயர் விபரங்கள் வெளியான வாரே உள்ளன. அதிலும் முக்கியமாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான ஷாலினி சோயா, அஸ்வின் போன்ற பலரது பெயர்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமன்றி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கப் போவது நயன்தாராவா இல்லை விஜய் சேதுபதியா என ரசிகர்கள் மனதில் இறுதியாக கேள்வி காணப்படுகின்றது.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பாண்டிச்சேரியில் பிக் பாஸ் படப்பிடிப்பிற்காக சென்றுள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகின்றார் என்பது கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதியாகியுள்ளது. இதனை ப்ரோமோ மூலம் வெளியிட்டே உறுதி செய்வார்கள் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement