போட்டோஷாப் வந்தாலும் வந்தது போலியான புகைப்படங்கள் உருவாக்கி அதை இணையதளங்களில் பரப்பி
விட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியில் உறுப்பினராக
சேரலாம் என்று செயலி ஒன்றை அறிமுகப்படுத்திய நிலையில் அதில் அஜித் சேர்ந்து கொண்டதாக போலியான புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் ஒரு
சிலர் பரப்பி நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியில் இரண்டே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்து
உள்ளதாக கூறப்படும் நிலையில் இதில் சில திரை உலக
பிரபலங்களும் சேர்ந்து உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென
அஜீத் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்து விட்டதாகவும் இது குறித்த போலி
புகைப்படத்தையும் நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி
வருகின்றனர்.
இதை பார்த்து போலி புகைப்படம் செய்பவர்களுக்கு
மனசாட்சியே இல்லையா? இப்படியெல்லாம் செய்யலாமா என்று கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. இந்த போலி புகைப்படத்தில்
உண்மையாக அஜித் கட்சியில் சேர்ந்தது போல் அஜித்தின் புகைப்படத்துடன்
தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் விஜய்யின் கட்சிக்கு அஜித் ஆதரவு கொடுப்பார் என்று கூறப்பட்டாலும் அதற்காக அவருடைய கட்சியில் எல்லாம் சேர்வார் என்று வதந்தியை பரப்பி விடுவதை பார்த்து விஜய் ரசிகர்களே அதிருப்தி அடைந்துள்ளனர்.
Listen News!