• Jan 19 2025

பின் வாசல் வழியாக தலைதெறிக்க தப்பியோடிய நடிகை கஸ்தூரி.. அதிரடி ஆக்சனில் சென்னை பொலிஸார்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகை கஸ்தூரி பேசியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மீது காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் காவல் நிலையத்திலும் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

d_i_a

இந்த நிலையில், சென்னை போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்த நடிகை கஸ்தூரி தப்பி ஓடி தலைமறைவாக இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஏற்கனவே அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம். தற்போது கஸ்தூரி தலைமறைவாகியுள்ளதால் மேலும் அவருக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

போலீசார் சம்மன் வழங்க கஸ்தூரி வீட்டிற்கு சென்றபோது அவர் பின் வாசல் வழியாக காரில் தப்பி சென்று விட்டதாகவும், இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Advertisement

Advertisement