• Apr 16 2026

அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.! "AK 64" குறித்து ஆதிக் ரவிச்சந்தர் ஓபன்டாக்

shali / 2 months ago

Advertisement

Listen News!

அஜித் ரசிகர்களுக்கு இன்று (23.01.2026) ஒரு திருவிழா நாளாகவே அமைந்துள்ளது. 2011ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமாக மாறிய ‘மங்காத்தா’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பட்டாசு, பேனர், கட் அவுட், பாலாபிஷேகம் என அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.


இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரும், அஜித்தின் 64வது படத்தை இயக்க உள்ள இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன், மங்காத்தா ரீ-ரிலீஸை திரையரங்கில் நேரில் சென்று பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆதிக் ரவிச்சந்திரனிடம், அஜித் 64 குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

அஜித் 64 குறித்து அப்டேட் கேட்டபோது ஆதிக் ரவிச்சந்திரன், "இந்த படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களுக்கு சர்ப்றைஸாக இருக்கும். பேமிலி ஆடியன்ஸ்க்கு பிடிக்கும் வகையில் படத்தை எடுக்க உள்ளோம். படத்தின் இசையமைப்பாளர் தொடங்கி, நடிகர்கள் வரை அனைத்தும் ரசிகர்களுக்கு சர்ப்றைஸாக இருக்கும்.” என்று கூறியுள்ளார். 

அவரது இந்த பேச்சு, அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இசையமைப்பாளர் மற்றும் நடிகர்கள் தேர்வு குறித்த அவரது குறிப்புகள், சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. 

Advertisement

Advertisement