• Sep 07 2026

BB 10 தொடங்கிய வேகத்திலேயே வெளியேறிய போட்டியாளர்கள்.. முதல்நாளே இப்படியொரு ட்விஸ்ட்டா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் 10-வது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீசனை தொடங்கி வைத்துள்ள நிலையில், தொடக்க நிகழ்ச்சியே ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்களை கொடுத்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இந்த சீசனின் தொடக்க நாளில் மொத்தம் 29 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒவ்வொரு போட்டியாளரும் நேரலை மேடையில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், அவர்களின் அறிமுகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்கள் நேரடியாக வாக்களித்தனர். இதன் மூலம் போட்டியாளர்களின் பிக் பாஸ் பயணம் தொடங்கிய நாளிலேயே எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.


பொதுமக்களின் வாக்குகள் மூலம் வீட்டிற்குள் நுழைந்த 19 போட்டியாளர்களுடன், ‘பிக் பாஸ்: தி காமன் மேன்’ மாநில அளவிலான போட்டியில் தேர்வான ஜேசன், முனியம்மா மற்றும் ஷாமா ஆகிய மூன்று சாமானிய மக்களும் இணைந்துள்ளனர். பிரபலங்களுடன் சாமானிய மக்கள் ஒரே வீட்டில் போட்டியிடுவது பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

அதே நேரத்தில், ஆஷா, மணிகண்டன், சோபா, மணிவண்ணன், டார்வின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தொடக்க நாளிலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர். தினமும் இரவு 9.30 மணிக்கு ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியை காணலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையாகவும் பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement