• Sep 08 2024

கிளைமேக்ஸ் நெருக்கும் எதிர்நீச்சல் பற்றி ஆதிரை ட்விட்.. எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் தொடரும்?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இதற்கான ரெஸ்பான்ஸ் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அதற்குப் பிறகு அவரது கேரக்டரில் நடிப்பதற்கு வேலராமமூர்த்தி என்ட்ரி ஆனார். இவர் வந்த பிறகு எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி படிப்படியாக குறைய தொடங்கியது.


இன்னொரு பக்கம் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதால் சில சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அதிலும் தற்போது இந்த எதிர்நீச்சல் சீரியல் நிறைவுக்கு வந்ததாக அதிர்ச்சியான தகவல் பரவி வருகின்றது.


இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகை சத்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அக்சப்ட் தி திங்ஸ் எண்ட்' என்று கேப்சன் போட்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனால் இந்த தகவல் உண்மை என உறுதியாகி உள்ளது.

இதேவேளை, தற்போது எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் தொடரலாம் என தகவல்கள் கசிந்துள்ளதோடு, விரைவில் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement