• Jan 19 2025

ராதிகாவின் கேரக்டரை தப்பாக குத்திக் காட்டிய ஈஸ்வரி.. மண்டையை பிச்சுக்கொள்ளும் கோபி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி  சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி கோபியை வரவழைத்து வீட்டில் நடந்ததை பற்றி அழுது புலம்புகிறார். மேலும் நான் காபிய கொட்டல, ராதிகாட அம்மா தான் கொட்டினா என்று சொல்ல, கமலாவுக்கும் ஈஸ்வரிக்கும் வாக்குவாதம் முற்றுகிறது.இதனால் கோபி ஈஸ்வரியை தனது கிச்சனுக்கு அழைத்து செல்கிறார்.

மறுபக்கம் ஜெனி அழுது கொண்டு இருக்க செழியன் சமாதானம் செய்கிறார். பாக்கியவும் அங்கு வந்து சமாதானம் செய்கிறார்.

இதை தொடர்ந்து கோபி கிச்சனில்,  அங்கிருந்த செஃப் வந்த ஆர்டரை மாற்றி கொடுத்து விட அவரை எச்சரிக்கிறார் கோபி. மேலும் அங்கிருக்கும் ஸ்டாப் எல்லாரும் சரியாக வேலை செய்யாததை பார்த்து கரராக பேசுகிறார். அதன் பிறகு ஈஸ்வரி வீட்டப் போவோம் என்னால் இருக்க முடியல என்று சொன்னதும் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.


இதையடுத்து வீட்டுக்கு வந்ததும் கோபி பிரஷ் ஆகிவிட்டு வாரேன் என உள்ளே செல்ல, ஈஸ்வரியிடம் கமலா வம்பு இழுக்கிறார். இதனால் ஈஸ்வரியும் மீண்டும் அவருடன் வாக்குவாதப்படுகிறார்கள். இதன்போது கமலாவை வீட்டை விட்டுப் போகுமாறு ஈஸ்வரி சொல்ல, நான் எதுக்கு போகணும் உன்ன தான் வீட்டை விட்டு துரத்திட்டாங்க என்று கமலா பதிலுக்கு சொல்ல, உனக்கு வெட்கம் இல்லையா? மருமகன் வீட்டுல வந்து இருக்கா  என்று ஈஸ்வரி கேட்கிறாள்.

அதற்கு கமலா நீதான் விவாகரத்தான மருமக வீட்டுல இருக்கா அப்படி என்று சொல்ல, நான் ஒன்றும் ஏற்கனவே கல்யாணம் கட்டினவனுக்கு என் மகளை கட்டி வைக்கல என்று சொல்ல, ராதிகா ஷாக் ஆகிறார். இதனால் மூவருக்கும் வாக்குவாதம் தொடர, அங்கு கோபி வந்த போது கமலாவை வீட்டை விட்டு வெளியே போகுமாறு ஈஸ்வரி சொல்லுகிறார்.

இதைக் கேட்ட ராதிகா இது என் வீடு அம்மா எனக்காக தான் இருக்காங்க என்று சொல்ல,  அப்ப இது உன் வீடு இல்லையா? என்று கோபியிடம் கேட்டு,  கமலாவை வீட்டை விட்டு போகுமாறு பிடிவாதமாக நிற்கிறார் ஈஸ்வரி. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement