• Aug 24 2026

அடேங்கப்பா.!! 200 கோடி கன்பேர்ம்.. வெளியான தளபதி பட அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் ரீ-ரிலீஸ் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. பழைய ஹிட் படங்களை பெரிய திரையில் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்கள் விரும்புவதால், தயாரிப்பாளர்களும் இந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


2017-ம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான இந்த படம், விஜய்க்கு மூன்று வேடங்களை வழங்கிய சிறப்பு திரைப்படமாகும். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மருத்துவம், கல்வி மற்றும் சமூக அநீதிகளை மையமாகக் கொண்டு உருவான கதை, ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

வெளியான காலத்தில் ‘மெர்சல்’ ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 19 அன்று மீண்டும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரீ-ரிலீஸ் அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பழைய நினைவுகளை மீண்டும் திரையில் அனுபவிக்கலாம் என்பதால், குடும்ப ரசிகர்களும் இந்த வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement