• Jun 06 2026

செம க்யூட்டா சிரிச்ச முகத்துடன் வாக்களித்த நடிகை த்ரிஷா.. இணையத்தில் வைரல் வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று காலை 7 மணி முதல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 5.73 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தன் தாயுடன்  சென்னை அல்வார்பேட் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். காலையிலேயே வந்து வாக்களித்த முதல் பிரபலங்களில் அவரும் ஒருவராக திகழ்ந்தார்.

மேலும் அவர் பச்சை நிற  சுடிதார் அணிந்து செம சிம்பிளாக சிரித்துக் கொண்டே அவர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தி விட்டு வெளியே வரும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

 

ஏற்கனவே, நடிகர்களான விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம், எஸ்.கே, சிபி, சிம்பு, தனுஷ், துருவ்  ஆகியோரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

மேலும் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தன் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை முதல் முறையாக தேர்தலில் களமிறக்கியுள்ளார். அவர் பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

அத்துடன், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். தற்போதைய சட்டமன்ற பதவிக்காலம் மே 10ஆம் தேதி முடிவடைகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தின் அடுத்த அரசை நிர்ணயிக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.

Advertisement

Advertisement