• Jan 19 2025

இலுமினாட்டி குரூப்பில் சேர்ந்துவிட்டாரா ஷாலு ஷம்மு? கொடூர கண்ணாக இருக்கிறதே?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


உலகம் முழுவதும் இலுமினாட்டி என்ற அமைப்பு இருப்பதாகவும் இந்த அமைப்பில் உள்ளவர்கள் தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் சக்திவாய்ந்த அமைப்பாக இந்த அமைப்பு ரகசியமாக செயல்பட்டு வருவதாகவும் பல ஆண்டு காலமாக கூறப்படும் ஒரு செய்தியாக உள்ளது.

மேலும் இந்த அமைப்புக்கு என்று ஒரு அடையாளம் இருப்பதாகவும், குறியீடு இருப்பதாகவும், இந்த அமைப்பில் உள்ளவர்கள் சாதாரண குடிமகன்கள் போலவே செயல்படுவார்கள், ஆனால் அவர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சக்தி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பிற்கான என ஒரு அடையாளக் குறியீடு இருப்பதாகவும் அந்த குறியீடு இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது.

அந்த அடையாள குறியீட்டை தான் நடிகை ஷாலு ஷம்மு தனது முதுகில் டாட்டூ வரைந்திருப்பதாக கூறப்படுவதால் அவரும் இலுமினாட்டி அமைப்பு சேர்ந்தவரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.



காமெடி மற்றும் கிளாமர் நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலம் என்பதும் அவர் தன்னுடைய ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன் அவர் தனது முதுகில் கண் போன்ற ஒரு அமைப்புடன் கூடிய டாட்டூவை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த கண்ணுக்கு கீழே உள்ள அடையாளம் இலுமினாட்டியின் அடையாளம் போல் உள்ளது என்றும் அதனால் ஷாலு ஷம்மு இலுமினாட்டி அமைப்பில் உள்ளவரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு அழகான கண்ணை டாட்டூவாக வரைய வேண்டும் என்பதுதான் ஷாலு ஷம்முவின் நோக்கம் என்றும், அவருக்கும் இலுமினாட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.



Advertisement

Advertisement