• Jan 19 2025

மீனா தங்கச்சி ஆட்டம் ஓவரா இருக்குதே.. லவ் செட்டாயிருச்சோ.. இனிமேல் சிக்கல் தான்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக சீரியல் என்றாலே பெண்களை கவரும் வகையில் தான் கதை அம்சம் இருக்கும் என்ற நிலையில் இந்த சீரியல் மட்டும் தான் விதிவிலக்காக ஆண்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்பம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் கூட முத்து - மீனா திருமண நாள் மற்றும் அது குறித்த குறித்த காட்சிகள் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த சீரியலில் நாயகி மீனாவின் தங்கை சீதா என்ற கேரக்டரில் நடித்து வரும் சங்கீதா சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதும் அந்த திரைப்படத்தில் அவர் கர்ப்பிணியாக நடிப்பது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்த நிலையில் அந்த புகைப்படம் வைரலானது என்பதையும் பார்த்தோம்.



இந்த நிலையில் சங்கீதா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் செம டான்ஸ் ஆகும் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பதும் அவருடன் சேர்ந்து ஒரு இளைஞரும் டான்ஸ் ஆடி வருவதை பார்த்து ரசிகர்கள் சீதாவுக்கு லவ் செட் ஆயிருச்சா என்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்தடுத்த எபிசோடுகளில் சங்கீதாவுக்கு லவ் வருவதாகவும், அவருடைய லவ்வராக பிரபலம் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சீதா வீட்டில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ‘உங்கள் நடனத் திறமைக்காக தான் உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் உங்கள் கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் அந்த சீரியலால் உங்களுக்கு பிரபலம் கிடைத்து விட்டது, இந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவில் சாதிக்க வாழ்த்துக்கள் என்றும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.


Advertisement

Advertisement