• Sep 28 2025

சமூக ஒற்றுமையை பாதிக்கும் வீடியோக்கள்.!யூடியூப் பிரபலம் திவாகர் மீது நடிகை சகிலா புகார்..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை சகிலா, ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்ற பெயரில் யூடியூப்பில் பரபரப்பாக செயற்பட்டு வரும் திவாகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திவாகர் தனது யூடியூப் வீடியோக்களில் சமூக விலகல், சாதி மோதல் போன்ற தீவிர கருத்துகளை பகிர்ந்து வருவதாகவும், அவை சமூகத்தில் கோளாறு ஏற்படுத்தக்கூடியவையாக இருப்பதாகவும் சகிலா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


 திவாகரின் சில வீடியோக்கள் தனிப்பட்ட தரமான தாக்கங்களை ஏற்படுத்தி சமூக ஒற்றுமையை பாதிக்கக்கூடியதாக இருப்பதையும், குறிப்பாக சாதி அடிப்படையில் மக்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.


“இது போன்ற கருத்துகள் சமூகத்தில் வெறுப்பை தூண்டும் எனவும்  இதனை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என சகிலா வலியுறுத்தியுள்ளார். காவல் துறை இந்த புகாரை கவனத்தில் கொண்டு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


Advertisement

Advertisement