• Aug 12 2025

'கூலி' வெளியீட்டுக்கு முன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசித்த லோகேஷ்!வைரலாகும் வீடியோ..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘கூலி’ ஆகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று ராமேஸ்வரம் சென்று பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரண மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். இதற்குமுன், அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பின்னர், கோவிலில் வழிபாடு செய்தார்.


இதுவரை தனது திரைப்படங்களுக்கு முன் ஆன்மிக இடங்களைத் தரிசிக்கும் பழக்கத்தை தொடரும் லோகேஷ் கனகராஜ், சில வாரங்களுக்கு முன்பும் தனது உதவி இயக்குநர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement