• Mar 25 2025

ரோபோ ஷங்கர் பேரனிற்கு பெயர் வைத்த உலகநாயகன்..!

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா கடந்த ஆண்டு அவரது சொந்த மாமாவை கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வரும் இவர்கள் குழந்தை குறித்த புகைப்படங்கள் விடியோக்களினை பகிர்ந்து வருகின்றனர்.


அந்த வகையில் தற்போது தனது பிள்ளைக்கு கமல்காசன் பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை மற்றும் கமலுடன் எடுத்த புகைப்படங்களை "எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு...உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் Dr. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் தம்பிக்கு“நட்சத்திரன்” என பெயரிட்டு வாழ்த்தினார்..என்றும் உங்கள் அன்புடன் எங்கள் நட்சத்திரன் கார்த்திக்" என கூறி பதிவிட்டுள்ளார்.


இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ..


Advertisement

Advertisement