• Apr 16 2026

கணவன் மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து கிறிஸ்மஸ்ஸைக் கோலாகலமாகக் கொண்டாடிய நடிகை நயன்தாரா- கண்ணு பட்டிடும் போல இருக்கே...

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.


இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். அநத வகையில் இவரது நடிப்பில் இறுதியாக அன்னபூரணி என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.


இப்படத்தினைத் தொடர்ந்தும் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.பல வருட காதலுக்கு பிறகு ஜூன் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் வாடகைத்தாய் மூலம் அவர்கள் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.


இவர்களின் குழந்தைகளுக்கு உயிர்,உலக் என்று பெயர் வைத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நயன்தாரா அவ்வப்போது தங்களுடைய புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது குடும்பத்துடன் இணைந்து கிறிஸ்மஸ்ஸைக் கொண்டாடியுள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement