• Apr 29 2026

கதாநாயகியாக அறிமுகமாகும் பிக்பாஸ் பூர்ணிமா- வெளியாகிய புதிய படத்தின் போஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி அராத்து ஆனந்தியாக ‘அராத்தி’ எனும் யூடியூப் சேனல் மூலமாக பிரபலமானார். இந்த சேனல் மூலம் பல வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருவார்.

அவரது வீடியோக்களுக்கு இன்றும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.கடந்த சில வருடங்களில் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதனை அடுத்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகளவான நெக்கட்டிவ்வான விமர்சனங்களையே பெற்று வருகின்றார்.


இந்நிலையில் தற்போது பூர்ணிமா ரவி ஹீரோயின் ஆக நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது. செவப்பி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தை MS ராஜா இயக்க இருக்கிறார். ஆஹா ஓடிடி தளத்திற்காக அந்த படம் உருவாக இருக்கிறதாம்.இதனால் ரசிகர்கள் பூர்ணிமாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement