• May 30 2026

'காவாலா' ஹிட் மறுபடியும் வருமா.. அல்லது ஃபேன் ரியாக்ஷன் மாறுமா?- 'ஜெயிலர் 2'

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு ஏப்ரல் 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி போன்றோர் சிறப்பு தோற்றத்தில் வருவதாக கூறப்படுகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக நடைபெற்று, ஆகஸ்ட் வெளியீடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 21ம் தேதியோடு நிறைவடைந்தது என அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். ஜூன் மாதம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது என சொல்லப்படுகிறது. இதுதான் இப்போதைய ஜெயிலர் 2 அப்டேட். ஜெயிலர் முதல் பாகத்திலிருந்து முதல் சிங்கிளாக வெளியான `காவாலா' மிகப்பெரிய ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட அந்தப் படத்துக்கான முகவரியாகவே மாறியது. அது போல இந்தப் பாடலும் பெரிய ஹிட்டை கொடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்துவந்தது. முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இந்த பாகத்தின் மீது மேலும் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. 


Advertisement

Advertisement