• Jan 19 2025

ஆட்சிக்கு வர மாட்டாங்கன்ற தைரியத்துல அடிச்சு விடுறது.. ராகுல் காந்தியை விமர்சித்த கஸ்தூரி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் வங்கி கணக்குகளில் 8500 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று கூறியதை நடிகை கஸ்தூரி கேலி செய்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இடையே கடுமையான போட்டி நிலவி வருவதாகவும், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவின் போது தான் யார் ஜெயிப்பார்கள் என்று தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று அவர் தான் போட்டியிடும் ரேபேலி தொகுதியில் பேசிய போது ஜூலை 1 முதல் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் காலையில் தங்கள் வங்கி கணக்குகளை சரி பார்த்தால் அதில் 8500 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு மாதமும் இது நடக்கும் என்றும் தெரிவித்தார்

ஒரு வருடத்திற்கு ஏழை பெண்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை தான் அவர் ஞாபகப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் ’ராகுல் காந்தி அவர்கள் செய்ய முடியாத வாக்குறுதியை அளித்து உள்ளார் என்றும் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்து இந்த மாதிரியான வாக்குறுதிகளை அழைத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆட்சிக்கு வர மாட்டாங்கன்ற தைரியத்துல அடிச்சு விடுறது... இப்பிடித்தான் தெலங்கானாவில அள்ளி குடுக்குறேன்னு சொன்ன எதையும் கிள்ளி கூட குடுக்கல.... என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement