• Jan 19 2025

டேமேஜ் ஆன 4500 ரூபாய்க்கு வாங்கிய செருப்பு.. செருப்பு கம்பெனியை கிழித்தெடுத்த நடிகை கஸ்தூரி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

4500 ரூபாய்க்கு வாங்கிய செருப்பு இரண்டே மாதத்தில் டேமேஜ் ஆகிவிட்டது என்று நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது விழிப்புணர்வு மற்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக பதிவு செய்து வருவார் என்பதும் அதற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவானாலும் அது குறித்து கவலைப்படாமல் தன்னுடைய கருத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் அவர் தீவிரமாக இருப்பார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ரூ.4500 கொடுத்து வாங்கிய செருப்பு இரண்டே மாதத்தில் டேமேஜ் ஆகிவிட்டது என்று செருப்பு கம்பெனியை கிழிகிழி என கிழித்த ஒரு வீடியோவை பதிவை செய்துள்ளார்.

பொதுவாக நான் 400 முதல் 1000 ரூபாய் வரை தான் செருப்புகள் வாங்க செலவு செய்வேன் என்றும் ஆனால் இந்த முறை 4500 ரூபாய்க்கு செருப்பு வாங்கினேன் என்றும் அந்த செருப்பு மாடல் எனக்கு பிடித்திருந்தால் அதை வாங்கிதாகவும் தெரிவித்தார்.

ஆனால் வாங்கிய இரண்டே மாதத்தில் இரண்டு செருப்புகளும் டேமேஜ் ஆகிவிட்டது என்றும் இப்படி ஒரு மோசமான செருப்பை நான் இதுவரை வாங்கியதில்லை என்றும் நானூறு ரூபாய்க்கு வாங்கிய செருப்புகள் கூட ஒரு ஆண்டுக்கு மேல் உழைத்த நிலையில் ரூ.4500 கொடுத்து வாங்கிய சிறப்பு இரண்டே மாதத்தில் டேமேஜ் ஆகிவிட்டது என்றும் அந்த செருப்பு கம்பெனியை வறுத்தெடுத்தார்.

இந்த பதிவுக்கு ஒரு சில நெட்டிசன்கள் காமெடியாகவும் கிண்டலாகவும் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். நீங்கள் வாங்கி இருக்கும் செருப்பு கேவலமான மாடல், கேவலமான நிறம், ’இதை நான் 150 ரூபாய் கொடுத்து கூட வாங்க மாட்டேன், நீங்களே 4500 கொடுத்து வாங்கின முட்டாள்’ என்று ஒருவர் பதிவு செய்துள்ளார்.  அதேபோல் ’சிலம்புக்காக கொதித்து எழுந்தாள் கண்ணகி செருப்புக்காக கொதித்து எழுந்தாள் இந்த கஸ்தூரி என்று ஒருவரும் ’இந்த பதிவை நீங்கள் தமிழில் பதிவு செய்திருக்கலாம்’ என்று ஒருவரும் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.



Advertisement

Advertisement