தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. பல தசாப்தங்களாக தென்னிந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவர், தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் திரிஷ்யம் 3 திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவனம் பெற்றுள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னதாக வெளியாகிய ‘திரிஷ்யம்’ படங்கள் மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் மூன்றாம் பாகம் உருவாகி வருவது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதால், படத்தின் மீது கூடுதல் கவனம் திரும்பியுள்ளது.

மீனா 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு வித்யாசாகர் திடீரென காலமானார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் மீனாவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
கணவரின் மறைவுக்கு பின், தனது மகளுடன் வாழ்க்கையை முன்னெடுத்து வரும் மீனா, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் இதன் பின்னர், சமூக வலைத்தளங்களில் அவர் இரண்டாம் திருமணம் செய்யப் போவதாக பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் மீனா இந்த வதந்திகளுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில்,“எனக்கு 2வது திருமணம் என பரவும் வதந்திகள் என்னைய ரொம்பவே காயப்படுத்தும். முன்னாடி என்னைப் பற்றிய வதந்திகள் எனக்கு தெரிய ரொம்ப லேட்டாகும். ஆனா இப்போ சோசியல் மீடியாவுல ஒரு விஷயம் வந்துச்சுன்னா அது பெருசாகி, சீக்கிரமாவே தெரிஞ்சிடுது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் ஒரு பெண் செலிபிரிட்டி, சிங்கிளாக இருக்கேன்றதுக்காக, உண்மை என்னன்னே தெரியாம என்ன வேணும்னாலும் பேசலாமா? கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு இப்படி பண்றீங்களா? இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கோபமா இருக்கு.” என தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
மீனாவின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் காலத்தில் தகவல்கள் மிக வேகமாக பரவுகின்றன. ஆனால் அவற்றில் எது உண்மை, எது வதந்தி என்பது பலருக்கும் புரியாமல் போகிறது. குறிப்பாக பிரபலங்களைப் பற்றிய தகவல்கள் சில நிமிடங்களில் வைரலாகி விடுகின்றன.
Listen News!