• Mar 20 2026

KGF-ஐ விட ஒரு படி மேல.. 'டாக்சிக்' படத்தில் அசத்தும் யாஷ்.! வெளியான டீசர் இதோ..

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படத்தின் டீசர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வெளியாகியுள்ள டீசர் தீவிரமான காட்சியமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. யாஷ் மிகுந்த ஸ்டைலிஷ் தோற்றத்தில், சக்திவாய்ந்த மற்றும் மர்மமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். 



‘டாக்சிக்’ திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், இதில் இணைந்துள்ள ஐந்து முன்னணி நடிகைகள் தான். குறிப்பாக, நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர். 

‘KGF’ தொடர் வெற்றிக்குப் பிறகு யாஷ் எந்த கதையைத் தேர்வு செய்வார் என்பது குறித்து ரசிகர்களிடையே நீண்டநாளாக எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், முற்றிலும் மாறுபட்ட கதை மற்றும் காட்சியமைப்புடன் ‘டாக்சிக்’ உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது வெளியாகியுள்ள டீசர் அதிகளவான பார்வைகளைப் பெற்று வருகிறது. 

Advertisement

Advertisement