• Jan 19 2025

பெண்களே திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.. குழந்தையுடன் விவாகரத்து பெற்ற நடிகை அறிவுரை..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

திருமணமாகி, குழந்தை பெற்று அதன் பின் கணவரை விவாகரத்து செய்த நடிகை ஒருவர் பெண்களே திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவுரை கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை பாமா என்பவர் தமிழில் ’எல்லாம் அவன் செயல்’ ’சேவற்கொடி’ ‘மதகத ராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாமா, 2021 ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக் கொண்டார். அதன் பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ததாகவும் குழந்தையுடன் அவர் தற்போது தனித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களுக்கு ஏன் திருமணம்? பெண்கள் திருமணம் செய்ய வேண்டாம், பணம் கொடுத்து திருமணம் செய்து கொள்வது மிகவும் ஆபத்தானது, உங்களை திருமணம் செய்பவர் உங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு உங்களை கைவிட்டு விட்டு ஓடி விட்டால் என்ன செய்வது? பெண்கள் ஒருபோதும் அப்படியான சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம், யார் எப்படி செய்வார்கள் எவ்வாறு நடப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என்றும் இந்த மன உளைச்சலால் சாவின் விளிம்புக்கு கூட பெண்கள் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த பதிவு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், பெண்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றால் ஆண்கள் யாரை திருமணம் செய்து கொள்வார்கள்? என்று பலர் எதிர் கேள்வி எழுப்பினர்.

 இந்த நிலையில் பாமா தனது பதிவுக்கு விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, வரதட்சணை கொடுத்து எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தான் சொன்னேன். என்னுடைய கருத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை பாமாவின் இந்த இரண்டு பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement