• Mar 26 2026

அடியே அழகே.. பிறந்தநாளில் தேவதை போல ஜொலித்த நடிகை அனுபமா.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனித்துவமான இடத்தை பிடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், இன்று (பிப்ரவரி 18) தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தனது திறமையான நடிப்பு, அழகான தோற்றம் மற்றும் தனித்துவமான குணாதிசயங்களால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.


அனுபமா தனது திரை வாழ்க்கையை மலையாளத்தில் “பிரேமம்” திரைப்படத்தில் நடித்ததில் இருந்து, ரசிகர்களின் மனதில் மின்னும் நட்சத்திரமாக உருவாகினார். தமிழ் சினிமாவிலும்,ஒரு சில படங்களில் அவர் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். 

இந்நிலையில், அனுபமா சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வெள்ளை நிற சேலை அணிந்து அழகாக காட்சியளிக்கிறார். இந்த போட்டோ ஷூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் அதை பரப்பி வருகிறார்கள். 

Advertisement

Advertisement