தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் 'ரெட்ரோ' படத்தை முடித்த அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுமூச்சாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்" தயாரிப்பில் உருவாகி சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை திரிஷா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் மௌனம் பேசியதே மற்றும் ஆறு போன்ற படங்களில் இணைந்து நடித்திருப்பதால் மீண்டும் அவர்களது கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வரும் ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைவிட இவர் கருப்பண்ணசாமி கெட்டப்பில் இரண்டு கால கட்டத்தில் நடிப்பதால் படத்திற்கு "வேட்டைக்கறுப்பு " என பெயர் வைத்துள்ளதாக இணையத்தில் செய்தி கசிந்துள்ளது.
Listen News!