• Apr 12 2026

24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு கிடைத்த ஞானபீட விருது.. தேர்வான கவிப்பேரரசு

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

இந்தியாவில் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு தமிழ் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் சிறப்பாக எழுதிய எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

பல மொழிகளுக்கான இலக்கிய விருதுகள் தனித்தனியாக வழங்கப்பட்டாலும், அனைத்து மொழிகளிலும் சிறந்த எழுத்தாளரை தேர்வு செய்து வழங்கப்படுவதால் இந்த விருது மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், தமிழை தனது கவித்திறத்தால் உலகளவில் உயர்த்திய வைரமுத்துவிற்கு ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தமிழ் இலக்கிய உலகிற்கு பெருமையாகக் கருதப்படுகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி எம்.கே. ஸ்டாலின், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


விருது அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து, “ஞானபீட விருதை மண்ணுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் இந்த விருதை இதற்கு முன்பு இரு எழுத்தாளர்கள் பெற்றுள்ளனர். 1975ஆம் ஆண்டு அகிலன் மற்றும் 2002ஆம் ஆண்டு ஜெயகாந்தன் இந்த விருதை பெற்றனர். அதன் பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ் எழுத்தாளருக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement