• May 20 2024

'கங்குவா" படத்திற்காக நிஜ புலியுடன் சண்டையிடும் நடிகர் சூர்யா... ரொம்ப பெரிய ரிஸ்க் எடுக்குறாரே...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா மிக பிரமாண்டமாக உருவாக்கி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். வித்தியாசமான கேரக்டரையும், கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி உடலின் தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு நடிப்பதில் வல்லமை கொண்டவர். அப்படிப்பட்ட இவர் முதன்முதலாக வித்தியாசமான கெட்டப்புடன் அதிக பட்ஜெட்டில் வரலாறு மிகுந்த படமான கங்குவா படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். 

இப்படத்தை பத்து மொழிகளில் வெளியிடுவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள். அத்துடன் திஷா பதானி, ரெட்டின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் பட வேலைகள் அனைத்தும் மிக மும்மரமாக நடைபெற்று வருகிறது.


அதற்கான வேலைகளில் தற்போது சூர்யா மிகவும் பிசியாக இருக்கிறார். அதாவது இப்படத்தின் சூட்டிங் சென்னை EVP-யில் ரப்பர் முதலையுடன் சூர்யா படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து படக்குழுவில் உள்ள அனைவரும் தாய்லாந்துக்கு சென்று நிஜ விலங்குகளுடன் பயிற்சி எடுக்கப் போயிருக்கிறார்கள்.


படப்பிடிப்புக்காக  உண்மையான புலியுடன் சூர்யா பழகிக் கொண்டு வருகிறார். அதன் பின் தான்  காட்சிகளை எடுக்க முடியும் என்பதால் சூர்யா தைரியத்தை வர வைத்துக் கொண்டு இயக்குனர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டு வருகிறார். தத்ருபமாக காட்சிகள் இருக்க வேண்டும் என்பதால் கங்குவா மொத்த டீமும் சூர்யாவை வைத்து முயற்சி செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement