• Jan 18 2025

நடிகர் சந்தானம் இந்த நிகழ்ச்சியின் மூலமா அறிமுகமாகினார்..? வெளியான பல தகவல்கள்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

1980 ஜனவரி 21 ஆம் தேதி  சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்து, பின் பல்லாவரம் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார் தான் நடிகர் சந்தானம்.


இவர் வாழ்க்ககையில் பல கஸ்டங்கள் பட்டாலும் தற்போது வாழ்க்கையில் பல வெற்றிப்படங்களை நடித்து சாதனை புரிந்துள்ளார்.

இவர் ஆரம்பத்தில் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.


தனது கேரியரில் சிம்புவுடன் சேர்ந்து, காதல் அழிவதில்லை, அலை, மன்மதன், வல்லவன், வானம் என பல்வேறு படங்களில் பணியாற்றி உள்ளனர்.

விஜய், அஜித், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில்  நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார்.


முதன் முதலில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் அறிமுகமானார்.

இவர் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசைய என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார்.நடிகர் சந்தானம்   உஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில் நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் 2016 ஆண்டு மரணம் அடைத்தார்.தந்தை இறப்பின் பின்னும் தந்தையின் ஆசையை நிறைவேற்றி தற்போது அடுக்கடுக்காய் பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்து வருகின்றார்.


Advertisement

Advertisement