• Apr 17 2026

பிரபல சீரியல் நடிகையைத் திருமணம் முடித்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி- வெளியாகிய வெடிங் போட்டோ- அடடே சூப்பராக இருக்கிறாங்களே...

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நெல்சன் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகியவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.

அதன் பின்னர் இவருக்கு A1 மற்றும் டாக்டர் திரைப்படங்கள் இன்னும் அதிக அளவில் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதை தொடர்ந்து பீஸ்ட், ஜெயிலர், DD Returns போன்ற படங்களில் நடித்து வந்தார்.


இந்நிலையில், நடிகர் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். சங்கீதா திருமகள் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.


இவர்களுக்கு பிரபல நடிகரும், நடன இயக்குநருமான சதீஸ் புதுமண தம்பதிகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை சங்கீதா விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் எல்.கே.ஜி, பாரிஸ் ஜெயராஜ் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement