• Jun 14 2026

பல முறை பிரேக்-அப்.. என்னை பிளாக் பண்ணிட்டாங்க! - நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஓபன்டாக்

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “LIK” திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாகவும், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் விழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்தனர். பிரதீப் ரங்கநாதன், “நான் இப்போது சிங்கிள் தான். என் வாழ்க்கையிலும் பல பிரேக்-அப்புகள் நடந்துள்ளன. நான் யாரையும் ப்ளாக் செய்ததில்லை, ஆனால் பலர் என்னை ப்ளாக் செய்திருக்கிறார்கள்.” என்று நகைச்சுவையுடன் கூறினார்.

அதேபோல், கீர்த்தி ஷெட்டி, “நானும் இப்போது சிங்கிள் தான். என் வாழ்க்கையிலும் ஒரு பிரேக்-அப் நடந்துள்ளது. அது பற்றி என் அம்மாவுக்கும் தெரியும். ஆனால் யாராவது என்னைப் பற்றி நெகட்டிவ் கருத்துகளை பரப்பினால், அவர்களை உடனே ப்ளாக் செய்து விடுவேன்.” என்று திறந்த மனதுடன் பகிர்ந்தார்.

இவர்களின் இந்த உரைகள் ரசிகர்களிடையே விரைவாக பரவி வைரலாகி வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படியான பேச்சுகள் படத்திற்கு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement