• Apr 09 2026

நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றது போன்ற வலி.! திரைப்பயணம் குறித்து மனம் திறந்த விக்னேஷ்!

shali / 1 day ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன. ஒரு பெரிய திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு தன்னிடம் வந்தபோதும், அது கடைசி நேரத்தில் கையில் இருந்து நழுவிப் போன அனுபவத்தை அவர் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்தார். 


திருமண மேடையில் தாலி கட்டுவதற்கு முன் மாப்பிள்ளை எழுந்து சென்றுவிட்டால் அந்த மணப்பெண் சந்திக்கும் மனவேதனை எவ்வளவு கடினமோ, அதேபோன்ற ஒரு வேதனையை தான் அந்த அனுபவம் தந்ததாக அவர் கூறினார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு தன்னை மீண்டும் நம்ப வைப்பது மிகவும் சிரமமாக இருந்ததாகவும், சிலர் தன்னை மதிப்பில்லாதவராகப் பார்க்கிறார்கள் என்பதைக் கூறாமல் உணர்த்திவிட்டார்கள் என்றும் அவர் வெளிப்படையாக பகிர்ந்தார். இந்த உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள “LIK” திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. கடந்த அனுபவங்களைக் கடந்து மீண்டும் தன்னம்பிக்கையுடன் திரும்பியுள்ள விக்னேஷ் சிவன், இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு புதிய இடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Advertisement

Advertisement