நடிகர் தனுஷ் தனது நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் தனது இயக்கத்திலும் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ப.பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர் தனது முதல் படத்திலே ரசிகர்கள் மனதில் இயக்குனராக இடம் பிடித்தார்.
இவர் இயக்கத்தில் சில ஆண்டுகள் இடைவேளைக்கு பின் வெளிவந்த படம் ராயன். இப்படத்தில் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிபெற்றது. இதன் பின்னர் அடுத்து neek என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடிந்த பின்னர் தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
#idlikadai release announcement pic.twitter.com/iNKNmfridz
— Dhanush (@dhanushkraja) November 8, 2024
Listen News!