• Feb 17 2025

விடாமுயற்சிக்காக தவம் இருக்கும் அனிருத்! அண்ணாமலை கோவிலில் அதிரடி பூஜை!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ரசிகர்கள் மனம் கவர்ந்த ட்ரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருகிறார். தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த பாடல் ரிலீசாக இருக்கும் நேரத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார்.   


நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.  ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ட்ரெண்டிங்கில் முதலில் இருக்கிறார். 


தற்போது இவர் இசையமைத்திருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாக உள்ளநிலையில், இசையமைப்பளர் அனிருத். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement