• Apr 15 2026

மிரட்டலான ஆக்ஷன்... டீசன்ட்டான கதைக்களம்.! பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் 'லீடர்'

shali / 1 week ago

Advertisement

Listen News!

லீடர் திரைப்படம், துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் ஷாம் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றாலும், வெளியான பிறகு படம் எதிர்பாராத அளவில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.


விமர்சன ரீதியாக ‘லீடர்’ திரைப்படம் டீசன்ட் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கதையின் நகர்வு, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் லெஜண்ட் சரவணனின் நடிப்பு ஆகியவை பாராட்டப்பட்டு வருகின்றன. இதனால், முதல் நாளில் சுமார் 75 லட்சம் ரூபாய் வசூல் செய்த படம், அடுத்த நாளில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

Sacnilk வெளியிட்டுள்ள தகவலின்படி, இரண்டாவது நாளில் மட்டும் படம் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. வார இறுதி என்பதாலும், நல்ல விமர்சனங்கள் பரவியதாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் திரள் அதிகரித்தது. இதன் மூலம் இரண்டு நாட்களில் படம் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

மொத்தத்தில், ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிடப்பட்ட ‘லீடர்’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல பேசுபொருளாக மாறி, லெஜண்ட் சரவணனுக்கு ஒரு முக்கியமான வெற்றியாக அமைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

Advertisement

Advertisement