வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதன்முதலாக இந்த கதையின் நாயகனாக சூரி நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவானது.
விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை எடிட்டிங் வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் தேவைப்பட்டால் ஒரு வாரம் மீண்டும் படப்பிடிப்பை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி தற்போது பாண்டியராஜ் படத்தில் ஷூட்டிங்கில் பங்கெடுத்துள்ளார். இதனால் விஜய் சேதுபதியை ஒரு வாரம் மட்டும் விட்டு தருமாறு பெர்மிஷன் கேட்டுள்ளார் வெற்றிமாறன்.
இவ்வாறு தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் சிக்கலில் மாட்டியுள்ள நிலையில், இதனை தீர்த்து வைப்பதற்கான முடிவு விஜய் சேதுபதி கையில் தான் உள்ளது. விடுதலை 2 படத்தில் நடிகர் சூரியுடன் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் இளையராஜா இசை அமைத்துள்ளதோடு முதலாம் பாகத்தில் இடம் பெற்ற வரவேற்பை போலவே இரண்டாவது பாகத்திற்கும் அவருடைய இசை ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!