• May 20 2024

விஜய் ஆண்டனிக்கு இந்த வயதில் வந்த திடீர் காதல்.. யோசிக்கவே முடியாத திருப்பங்கள்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு இந்த வயதில் திடீரென காதல் வந்ததாகவும் அந்த காதல் யோசிக்கவே முடியாத அளவுக்கு திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ரோமியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்கிய இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’எங்கள் படத்தின் ஹீரோ மலேசியாவில் தொழில் செய்து பெரும் பணத்துடன் ஊருக்கு திரும்பிய நிலையில் தான் அவர் தனது வாழ்வில் காதல் என்பதே இல்லை என்பதை உணர்கிறார். இதனை அடுத்து அந்த வயதில் அவர் லவ் செய்தால் என்னென்ன கலகலப்பு ஏற்படும், பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்வையாளர்கள் யோசிக்கவே முடியாத அளவுக்கு ஒரு விறுவிறுப்பான நகைச்சுவையான அம்சங்களுடன் கூடிய படத்தை இயக்கி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் பார்க்க வரும் ஆடியன்ஸ் ஆரம்பம் முதல் இறுதி வரை சந்தோஷமாக சிரித்து கொண்டே இருப்பார்கள் என்றும் காமெடிக்கு முழு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் இப்படி ஒரு முழு நீள காமெடி படம் தமிழில் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன் 2’ படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன், அப்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது, அப்போதுதான் நான் எழுதிய கதையை அவரிடம் கூறிய போது, கண்டிப்பாக நாம் ஒரு படம் சேர்ந்து செய்வோம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்து வாக்குறுதிப்படியே ’ரோமியோ’ படத்தின் படத்தை இயக்க எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அவருக்காகவே இந்த படத்தின் திரைக்கதையை எழுதினேன் என்றும் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நகைச்சுவை படமாக இருக்கும் என்றும் இயக்குநர் விநாயக் கூறினார். ’பிச்சைக்காரன்’’பிச்சைக்காரன் 2’ போன்ற சீரியசான படத்தில் நடித்த விஜய் ஆண்டனிக்கும் இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement