• Dec 07 2024

பல மில்லியன் கடந்த 'கோல்டன் ஸ்பாரோ'... ஜி.வி பிரகாஷ் பகிர்ந்த புகைப்படம்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர். மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். 


இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியானது. நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. 


இந்த நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் இரண்டாவது பாடலாக 'காதல் பெயில்' என்ற பாடல் கடந்த திங்கள் அன்று வெளியானது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கோல்டன் ஸ்பாரோ'  பாடல்  சுமார் 90 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

Advertisement