மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றார். அத்தகைய மோகன்லால் சமீபத்திய பேட்டியில் கதைத்த தகவல் சினிமா வட்டாரத்தில் விவாதத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது.
அந்த பேட்டியின் போது மோகன்லால், "இவ்வளவு நாளாக எம்புரான் படத்தில் பிஸியாக இருந்தேன், இப்பொழுது ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதற்கு அழைத்தால் உடனே போய்விடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
மோகன்லாலின் ‘எம்புரான்’ படம் என்பது, ‘லூசியான்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் பிரமாண்டமான படமாகும். பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் மலையாள சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்பொழுது ‘ஜெயிலர் 2’ உருவாகும் நிலையில் யாரெல்லாம் அப்படத்தில் நடிக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி இருக்கின்றது. இப்பொழுது மோகன்லால் கூறிய கருத்துக்கள் அனைத்து மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!