தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகப் போற்றப்படும் அஜித் குமார், தற்போது நடித்து வந்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்ட படமாக காணப்படுகின்றது.
ஏப்ரல் 10 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படம் ரிலீஸுக்கு முன்பே அதிகளவு பார்வையாளர்களைக் கொண்டு காணப்படுகின்றது. டீசர் மற்றும் பாடல்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் தற்பொழுது ப்ரீ புக்கிங்கில் அதிகளவு வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் முதல் பாடலான “OG சம்பவம்” வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். இப்பொழுது இப்படத்தின் இரண்டாவது பாடலும் இந்த வாரம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ‘தல' ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில், வட அமெரிக்காவில் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. இப்படம் 2 நாட்களிலேயே ரூ.2.5 லட்சம் வரை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!