• Jan 19 2025

வீட்டுக்குள்ள காடா? இல்ல காட்டுக்குள்ள வீடா? பிக் பாஸ் 8ன் ஹவுஸ் வியூ இது தானா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி களமிறங்கி உள்ளார். இந்த முறை ஆட்டமும் புதுசு ஆளும் புதுசாக காணப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காணப்படுகின்றா

வரலாற்றில் முதல் முறையாக பிக் பாஸ் சீசன் 7 இல் இரண்டு வீடுகள், ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரிகள், 18 போட்டியாளர்கள் என அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் அந்த சீசனில் எதிர்பாராத விதமாக பல திருப்பங்கள், சுவாரசியங்கள் நடைபெற்றன. அதில் ஒன்றுதான் இதில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்க்கு ரெக்கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட சம்பவம்.


இந்த விவகாரத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 சூடு பிடித்தது. பிரதீப் தான் இறுதியில் வெற்றி வாகை சூடுவார் என்று பலர் ஆரம்பத்திலேயே கணித்திருந்தார்கள். ஆனால் நாளடைவில் அவர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு அவருக்கு ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியிருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் சக போட்டியாளர்களாக காணப்பட்ட மாயாவும் பூர்ணிமாவும் தான் என்று அவர்களுக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். இறுதியாக பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அர்ச்சனா ரவீந்திரன்  வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 8ற்கான ஹவுஸ் வியூ  வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் வீட்டுக்குள்ள காடா? இல்ல காட்டுக்குள்ள வீடா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஆனால் இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால் இந்த ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கப் போவதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement