• Feb 22 2025

தோள்மீது சாய்ந்த விக்கி! மெதுவாக ரகசியம் சொன்ன நயன்! வைரலாகும் அழகிய வீடியோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிரேம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் ஒரு வீடியோவை ஷேர் செய்து "என்ன நடந்தாலும் சிரித்துக்கொண்டே நகர்ந்து கொண்டே இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்ட தனது 2 குழந்தைகளுடன் தனது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது  இன்ஸ்டாகிரேம் பக்கத்தில் "என்ன நடந்தாலும் சிரித்துக்கொண்டே நகர்ந்து கொண்டே இருங்கள்" என்று ஒரு பதிவினை போட்டு நயனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நயன் மீது விக்கி சாய்ந்து இருக்க நயன் ஒரு கார்ட்போட் வைத்து மறைத்து கொண்டு ரகசியம் கூறுகிறார். பின்னர் இருவரும் பார்த்துக்கொண்டு சிரிப்பது போல வீடீயோவை ஷேர் செய்துள்ளார். 


மேலும் அந்த வீடியோவில் நயன்-விக்கி பட்டுப்புடவை,வேஷ்ட்டி கட்டி கலாச்சாரமாக இருக்கும் அழகிய புகைப்படங்களையும் இணைந்து பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் "எவ்வளவு அழகான ஜோடி, எப்போதும் ஒன்றாக இருங்கள், நயன்தாரா உண்மையில் விக்கியை தேர்ந்தெடுத்து அழகான வாழ்க்கையை பெற்றுக்கொண்டார்" என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ  

Advertisement

Advertisement