• Sep 07 2024

’சர்தார் 2’ படப்பிடிப்பு ஆரம்பித்த 2 நாட்களில் விபத்து.. பிரபலம் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கார்த்தி நடிக்கும் ’சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் இன்று ஏற்பட்ட விபத்தில் சண்டைக்கலைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்பதும் கார்த்தி மற்றும் எஸ்ஜே சூர்யா இந்த படத்தில் நாயகன் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரு முக்கிய காட்சி படமாக்கப்பட்டது. இதில் 20 அடி உயரத்தில் இருந்து ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது திடீரென அவர் தவறி விழுந்தார். அப்போது அவருடைய மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டதாகவும் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து படக்குழுவினர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement