• Mar 13 2026

ஆடிப்பிறப்பில இத்தனை அப்டேட்டா ! கொண்டாட்டம் தான் போங்க...

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

இன்றைய நாளில் தமிழ் மக்களின் சிறப்பான கொண்டாட்டங்களில் ஒன்றான ஆடிப்பிறப்பு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாத முதலாம் நாளை வரவேற்று கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது சைவத் தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் கொண்டாட்டமாகவே அமைகிறது.


இந்நிலையில் இந்த சிறப்பு தினத்தில் வெளியாகிறது தமிழ் சினிமா ரசிகர்கள் வெகுகாலமாய் எதிர்பார்த்து காத்திருந்த பல்வேறு படங்களின் அப்டேட்கள்.அவர் இவர் என்றல்லாது தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரது படங்களினதும் முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகிறது.


முதலாவதாக நடிகர் சூரியின் "விடுதலை பாகம் 2" இன் பெட்ஸ் லுக் போஸ்டர் காலை 11.30 மணியளவிலும் அடுத்து பிரபு தேவாவின் "பேட்ட ராப்" படத்தின் இரண்டாம் பாடல் மாலை 4 மணியளவிலும், மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயனின் "அமரன்" படத்தின் ரீலீஸ் டேட் மற்றும் சியான் விக்கிரமின் "தங்கலான்" படத்தின் முதல் பாடல் என்பன வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement