• Jan 19 2025

ரிலீஸுக்கு ரெடியாகும் ஜெயம் ரவியின் "பிரதர்" திரைப்படம்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சித்தார்த் ரவிபதி மற்றும் செந்தில் குமார் இணைந்து தயாரிக்கும் "பிரதர்" எம்.ராஜேஷ் எழுத்து இயக்கத்தில் ஜெயம் ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காமெடி ட்ராமாட்டிக் திரைப்படமாகும்.இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார்.

Jayam ravi 30 title brother director m ...

ஆகஸ்ட் 2022 இல் JR30 என்ற தற்காலிகத் தலைப்பில் அறிவிக்கப்பட்டு ஆரம்பமான இத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பான  "பிரதர்" செப்டம்பர் 2023 இல் அறிவிக்கப்பட்டது.படத்தின் இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியுள்ளது ரசிகர்களுக்கு போனஸ் என்றே சொல்லலாம்.

Brother (upcoming film) - Wikipedia

இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் மற்றும் படத்தின் வெளியீட்டிற்கான அடுத்த கட்ட வேலைகள் வெகு விரைவாக நடந்து வரும் இந்நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.வருகிற செப்டெம்பர் 27 முதல் "பிரதர்" திரைப்படத்தை திரையில் காணலாம் என வெளியீட்டு திகதி குறித்தான அறிவிப்பு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement