• Apr 26 2024

வெளியாகும் துணிவு படத்தின் 33 BGM-கள்.. ஜிப்ரான் கொடுத்த மாஸ் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துணிவு படத்தின் OST ரிலீஸ் குறித்து ஜிப்ரான் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

ஹெச்.வினோத், சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார். வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி  அன்று  திரையரங்குகளில் வெளியானது. 

'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அத்தோடு நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அத்தோடு துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அத்தோடு  இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.


இவ்வாறுஇருக்கையில் "துணிவு படத்தின் 33 பிண்ணனி இசை தீம் கோர்வைகளின் பெயர்களை வெளியிட்டு விரைவில் இவை அனைத்தும் வெளியாகும்" என ஜிப்ரான் பதிவிட்டுள்ளார்.  தற்போது அஜித் ரசிகர்கள் இந்த பின்னணி இசை கோர்வை வெளியீட்டை எதிர் நோக்கி உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement