• Apr 26 2024

RRR படத்தின் 2 -ஆம் பாகமா..? ராஜமௌலி கூறிய தகவல்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரை துறையில் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வருபவர் தான் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. யமதொங்கா, மஹதீரா ஆகிய தெலுங்கு படங்களில் முறையே ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடித்தனர்.மேலும் இந்த படங்கள் ஃபேண்டசி படங்களாகவும் ஹிட் கொடுத்தன. எனினும் இதனை தொடர்ந்து பாகுபலி 2 பாகங்களாக வெளிவந்து இந்திய அளவில் ஹிட் மற்றும் வசூல் அடித்தது.

எனினும் இதன் மூலம் தமிழ் உட்பட பல மொழிகளில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஒரு திறமான இயக்குநராக அறியப்பட்டார். அத்தோடு வரலாற்று காலத்தின் மித்தாலஜி ஃபேண்டஸி படமாக அமைந்த இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே ஐகானிக் என்கிற அந்தஸ்தை அடைந்தது. இதனையடுத்து இந்திய சரித்திர புனைவு படங்களை இயக்குபவர்களில் ஒருவராக திகழும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது.

பாகுபலி எனும் பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை ஒரே படத்தில் இணைத்தார். 



அத்தோடு கொமராம் பீமராவ் மற்றும் அல்லூரி சீதாராம இராஜு ஆகிய வெவ்வேறு பிரிட்டிஷ் காலக்கட்டத்து கதாபாத்திரங்களை ஒரே பீரியடில் வாழ்ந்ததாக கற்பனையாக புனைந்து ஒரு கதையை அமைத்தார். எனினும் இந்த கேரக்டர்களில் முறையே ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை நடித்தனர். இதன் பின்னர் இப்படம், ஆஸ்கர் விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  அமெரிக்காவிலுள்ள சிகாகோவில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இயக்குநர்  ராஜ மௌலி பேசினார்.  முன்னதாக RRR என்கிற தலைப்பு குறித்து பேசிய ராஜமௌலி,  “நானும், ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இணைவதாலேயே ரசிகர்கள் இந்த படத்துக்கு இப்படி தலைப்பு வைத்துவிட்டனர். எனினும் அதற்கு மேல் நாம் என்ன முடிவு செய்ய? ஆனால் அதற்கான முறையான அர்த்தத்துடன் 5 மொழிகளில் வெளியிட்டோம். மேற்படி 5 மொழிகளிலும் அயல்நாடுகளிலும் படம் வெளியானதால் மொழி தாண்டிய கவன ஈர்ப்பை பெற டைட்டில் உதவியது. ” என தெரிவித்தார்.



இதேபோல் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலை படமாக்க 15 நாட்கள்  ஆனதாக பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘ஆர்ஆர்ஆர்-2 ’ படத்தின் 2-ஆம் பாகத்திற்கான திட்டம் உள்ளதா என்கிற கேள்விக்கு பதிலளித்தார். மேலும் அதில், “அதற்கான ஆரம்ப கட்ட கதை விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. என்னுடைய தந்தை பிரபல கதாசிரியர்தான். நானும் என் தந்தை விஜயேந்திர பிரசாத்தும் இப்படத்தின் 2-ஆம் பாகம் குறித்தும் பேசியுள்ளோம். ஆம், அதற்கான பணிகள் நடக்கின்றன” என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து கோஷமிட்டனர்.


Advertisement

Advertisement

Advertisement