• Apr 15 2026

புதிய படத்தில் நடிக்க கமிட்டான சிறகடிக்க ஆசை சீரியலின் இளம் நடிகர்? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

குறித்த தொடரில் முத்து, மீனா கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்து தொடர் ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மக்கள் பல நாட்களாக எதிர்ப்பார்த்த மனோஜ் செய்யும் திருட்டுத்தனம், அதாவது, அவர் பார்க்கில் தூங்கிவிட்டு வேலைக்கு செல்வதாக நாடகமாடிய விடயம் தற்போது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிய வருகிறது.


இதை தொடர்ந்து வீட்டில் பூகம்பம் வெடித்து போல பிச்சனை ஏற்பட்ட, ரோகிணி காணாமல் போக, மனோஜ் முத்துவுடன் சண்டை போடுகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது, என்ன கதைக்களம் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

இந்த தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது அவர் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறாராம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement