• Jul 05 2026

இதயத்தை வென்றுவிட்டாய் தம்பி.! - நேரில் அழைத்து கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி..

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கென் கருணாஸ், இன்று இளம் நடிகராகவும் உருவெடுத்து வருகிறார். நடிகர் கருணாஸ் அவர்களின் மகனான இவர், ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார்.


இதனிடையே, கென் கருணாஸ் இயக்கியும் நடித்தும் கடந்த மாதம் வெளியான ‘யூத்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம், இளம் தலைமுறையை கவரும் வகையில் உருவாகி, ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்றது. உலகளவில் ரூ.70 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுவது, கென் கருணாஸின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டி, கென் கருணாஸை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு இன்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘யூத்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய திறமையும், முயற்சியும் பாராட்டுக்குரியது என ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த பாராட்டு, கென் கருணாஸின் திரையுலக பயணத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மேலும், இளம் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தன்னை நிரூபித்து வரும் கென் கருணாஸுக்கு இது ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. ரசிகர்களும் இவரின் அடுத்த படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement