• Apr 27 2024

ஆமா, எனக்கு பொம்பள சோகம் வேணும் – இரண்டாவது மனைவியுடன் கொஞ்சி விளையாடும் நடிகர் பப்லு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பப்லு என அழைக்கப்படும் பிரித்விராஜ். தமிழ் ,தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தற்பொழுது கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகின்றார்.

மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கின்றார்.இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது.இவருடைய மகனின் பெயர் அகத்.இந்நிலையில் நடிகர் பப்லுவிற்கு இரண்டாவது திருமணம் ஆகி இருப்பதாக தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


பப்லு இரண்டாம் திருமணம் செய்த பெண் மலேசியாவை சேர்ந்தவர் என்றும் அவருக்கு 23 வயது தான் ஆகிறது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள பப்லு தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்கு 23 வயது இல்லை அவருக்கு 24 வயது ஆகிறது என்று கூறி இருக்கிறார்.


மேலும், அவர் மலேசியாவை சேர்ந்த பெண் இல்லை அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு பெண் என்றும் கூறியுள்ளார். மேலும், இது எங்களுடைய விஷயம்  அவர்களும் அதற்கு சம்மதித்து விட்டார்கள். ஒரு வருடமாக தான் எங்கள் இருவருக்கும் பழக்கம். எனக்கு 56 வயதாகிறது அவருக்கு 24 வயது தான். எனவே, அவர் யோசிக்க நேரம் வேண்டும் என்பதால் இன்னும் நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவரும் எங்கள் திருமணத்தில் உறுதியாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.


இப்படி ஒரு நிலையில் தன் வருங்கால இரண்டாம் மனைவியுடன் முதன் முறையாக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் கமெண்டில் வந்த சில விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். வந்த ஒரு கமெண்டில் பொம்பள சுகம் கேக்குதா என்ற கமென்டிற்கு ‘ஆம் கேக்குது’ என்று பதில் அளித்துள்ளார். மேலும், தன் முதல் மனைவி குறித்து பேசிய பப்லு ‘எனக்கு இவங்க நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை எனக்கு கொடுக்கிறாள் இதையெல்லாம் என் முதல் மனைவி கொடுக்கவில்லை அவங்க என்னை சரியாக கையாண்டிருந்தால் நான் வெளியில் சாப்பிட்டு இருக்க மாட்டேன் அவங்க நிச்சயம் இதை நல்லபடியாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை’ என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement