• Mar 31 2025

'ராயன்’ படத்தில் இந்த முரட்டு நடிகையும் இருக்காங்களா? மாஸ் காட்டும் போஸ்டர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

இதனைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்க, இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் தனுஷின்  கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அபர்ணா பால முரளி, நித்யா மேனன், அனிகா சுரேந்திரன், சந்திப் கிஷன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முறுக்கிக்கொண்டு நிற்கும் தனுஷ் மற்றும், அவருக்குப் பின்னால், சந்தீப் கிஷணும், காளிதாஸ் ஜெயராமும் கையில் கத்தியுடன் நிற்கிறார்கள்.

'ராயன்’ படத்தில் நடிகை அபர்ணா முரளியின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனம் நேற்றைய தினம் வெளியிட்டது.

இந்த நிலையில், 'ராயன்’ படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் போஸ்டை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது.


Advertisement

Advertisement