• Apr 17 2026

நான் அதில் சாகவில்லை... கைதி 2 பற்றி லேட்டஸ் அப்டேட் கொடுத்த அர்ஜூன்தாஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற பல பெஸ்ட் என சொல்லப்படும் திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் தான் இயக்குநர் வசந்தபாலன். 

கடந்த ஆண்டு அவருடைய இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அநீதி. திரைப்படத்தில் அர்ஜுன்தாஸ் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார் மேலும் வனிதா விஜயகுமார், பரணி, காலி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு பல பாராட்டுகள் கிடைத்தது.

கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் தோன்றியவர் மக்கள் மத்தியில் இன்னும் அன்புவாகவே மின்னுகிறார். அதனை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.


மேலும், அவர் தொடர்ச்சியாக பல படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் அவைகளில் வில்லன் கதாபாத்திரம் அல்லாமல் ஒரு பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக அண்மையில் பேட்டியொன்றில் சொல்லியுள்ளார்.

இந்த நிலையில், கைதி 2 படத்தை லோகேஷ் எடுத்தால் அதில் கண்டிப்பாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஏனெனில் கைதி படத்தில் நான் சாகவில்லை. அதனால் கைதி 2வில் இருப்பேன் என நம்புகிறேன் என்று புதிய அப்டேட்டை கொடுத்தார் அர்ஜூன்தாஸ்.


Advertisement

Advertisement